நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

ஈஸ்வரன் மற்றும் பூமி படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். மாடெல்லிங் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த நடிகை நிதி அகர்வால் பின்பு பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு அங்கிருந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி மிக பிரபலமானார். சாக்லேட் நிறத்தில் அழகாக காட்சியளிக்கும் நிதி அகர்வால் தெலுங்கு ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தார். நிதி அவர்களின் அழகு முகம், சிரிப்பு பலரால் ரசிக்கப்பெற்று பாராற்றும் பெற்றார்.

தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்ற இவர் தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார். ஹிந்தி பேசக்கூடிய ஒரு அகர்வால் குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் ஹைதராபாத் மாநிலத்தை பிறப்பிடமாய் கொண்டவர். 

கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரத்தில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ள இவர் எளிதாக பேசும் அளவிற்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளை கற்று அறிந்தவர். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்துள்ளார். சிறுவயதில் இருந்து நடன கலையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், பெல்லி டான்ஸ், பல்லெட், கதக் போன்ற நடன கலைகளை நன்கு கற்றறிந்துள்ளார்.

நேற்று காதலர்கள் தினத்தை தொடர்ந்து நிதி அகர்வால் அவர்களின் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து நடிகை நிதி அகர்வால் அவர்களுக்கு சிலை கட்டியுள்ளனர். மற்றும் ட்விட்டரில் #NationalCrushNidhhi எனும் ஹாஷ் டேக் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இது மற்ற சினிமா ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இவனுங்க வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பண்ராய்ங்க டா!” என மக்கள் அனைவரும் தலையில் அடித்துக்கொள்ளும் படி இப்படி ஒரு செயலை செய்துள்ளனர் நிதியின் ரசிகர்கள். நடிகர், நடிகைகளுக்கு சிலை கட்டும் கலாச்சாரம் இன்னுமும் தொடர்ந்து கொண்டிருப்பது ஆச்சிரியம் அளிக்கும்படி இருக்கிறது.Categories: Cinema News

Tags: , , , ,

%d bloggers like this: