சர்வதேச திரைப்பட விழா International Film Festival Rotterdam-ல் வெற்றி பெற்ற “கூழாங்கல்” திரைப்படம்.

போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். பின் வேலையில்லாத பட்டாதாரி படத்தில் ஒரு சிறிய கேமியோ ரோலில் வந்து மக்களிடம் பரிச்சையமானார். பின்பு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி மக்களிடம் மிகவும் பிரபலமானார். இது மட்டுமில்லாமல் நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் ஆரம்பித்து உள்ளார். சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்த “பாவக்கதைகள் ” எனும் நெட்பிலிக்ஸ் அந்தோலோஜி வெப்சீரீஸில் “லவ் பண்ணா வுட்றனும்” எனும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் #Netrikann படம் படப்பிடிப்பில் உள்ள நிலையில், கூழாங்கல் எனும் திரைப்படத்தை தயாரித்து வழங்கவிருந்தது.

பி.எஸ். வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த தருவாயில் படத்தை விக்னேஷ் சிவன் பார்த்து வியந்து இதன் முழுமையான தயாரிப்பை நான் ஏற்று வெளியிடுகின்றேன் என கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த படம் தன்னை மிகவும் வியப்படைய செய்ததாகவும் இந்த மாதிரியான படங்களால் தான் சினிமாவில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன் எனவும் கூறியிருந்தார். மேலும் இப்படம் டைகர் காம்படிசன் 50 ஆவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி உள்ளது என திரு. விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இன்று Pebbles திரைப்படம் Tiger Award competition, International Film Festival Rotterdam ல் 2021 Tiger Award -யை வென்றுள்ளது.

https://iffr.com/en/pebbles-vinothraj-ps-wins-2021-tiger-awardCategories: Cinema News

Tags: , , , , , , ,

%d bloggers like this: