‘ராஜா ராணி’, ‘பிகில் ‘ படத்தின் எடிட்டர் ரூபன் வெளியிட்ட ‘RIP’ குறும்படம்.

தமிழ் திரையுலகில் ஷார்ட் பிலிம்களின் மோகம் அதிகரித்து கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஷார்ட் பிலிம் மூலமாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுக ஆனவர்கள் ஏராளம். அதில் சிலர் உச்சத்தில் இருக்கிறார்கள் சிலர் காணாமலும் போய் இருக்கிறாரகள். தமிழில் திரைப்படங்களுக்குள் இருக்கும் போட்டியை போல குறும்பட திரைபடங்களுக்குள்ளும் அதிக போட்டிகள் உள்ளனர். அதில் ஒரு சிலரே வெளியே தெரிகிறார்கள். அந்த வரிசையில் “RIP” எனும் வித்தியாசமான கதை அம்சமுடைய குறும்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் ஹார்ரர் குறும்படம் என யூடூப்பில் சர்ச் செய்தால் பல ஆயிரம் குறும்படங்கள் வரிசையாக வரும், அதில் வித்தியாசமான திரைக்கதை கதையம்சம் உள்ள சில குறும்படங்களே வெற்றி பெறுகின்றன. RIP குறும்படத்தின் இயக்குனர் பி. மதன கோபால் இதை பற்றி கூறுகையில் “நாங்கள் முதலில் உருவாக்கிய ‘துணை கதாப்பாத்திரம்’ Side Character எனும் குறும்படம் இப்பொழுது யூடூப்பில் 3 லட்சம் பார்வையாளர்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து தமிழில் ஹார்ரர் படங்கள் நிறைய வருகின்றன, ரொம்ப நாட்களாகவே வித்தியாசமான ஒரு ட்விஸ்ட் ஓடு, திரைக்கதையோடு ஒரு கதை என் மனதில் உருத்திக்கொண்டிருந்தது. அதற்க்கு சரியான குழு அமைந்தவுடன் உருவாக்கினேன். யாரும் சற்றும் எதிர்பாத்திராத ட்விஸ்டோடு அமைந்திருக்கும் இப்படம் மக்களிடம் அதிக வரவேற்பை பெரும் என நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ராம் பிரவீன், பாலாஜி இரண்டு பெரும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சிவா வீமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அசோக் ஸ்ரீதரன் இசையமைத்த இப்படத்தில் நாகராஜன் மற்றும் தீபக் ராஜகோபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இக்குறும்படத்தை “ராஜாராணி”, “பிகில்”, கானா போன்ற படங்களின் படத்தொகுப்பாளர் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறும்படம்:Categories: Uncategorized

Tags: , , , , , , , ,

%d bloggers like this: