நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் இதுவாக இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வரும் ஷாலு ஷம்முவின் ஸ்டோரி

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ராவுக்கு ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவருடன்தான், சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும்.
புற நகர் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதால், டிவி சீரியலில் நடிப்பதற்காக, சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா. அந்த ஹோட்டலில்தான் தூக்குப்போட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்நது வருத்தப்படாத வாலிபர் சங்கம் சூரி அவர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை ஷாலு ஷம்மு சித்திராவிடம் தான் தொலைபேசியில் பேசிய கடைசி தருணங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

நீ இப்படி ஒரு பிரிவை ஏற்படுத்துவாய் என்று நான் சிறிது கூட எண்ணிப் பார்க்கவில்லை. நீ என்னிடம் கடைசியாக தொலைபேசியில் பேசிய போது கூட ஒவ்வொரு நொடியும் நீ தவறான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வில்லை என ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நீ அதை மறுத்து பேசிக் கொண்டிருந்தாய். இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் நான் என்னால் முடிந்த வரை முயற்சி செய்து உன்னை சமாதானப்படுத்து இருப்பேன். நொறுங்கிய இதயத்துடன் உன் பிரிவில் வாடுகிறோம் சித்து”

என நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

எனவே நடிகை சித்ரா அவர்களின் தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.Categories: Cinema News

Tags:

%d bloggers like this: