சீரியல் நடிகை சித்ரா தற்கொலை ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் – vj chithra suicide


சித்ராவுக்கு ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவருடன்தான், சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும்.
புற நகர் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதால், டிவி சீரியலில் நடிப்பதற்காக, சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா. அந்த ஹோட்டலில்தான் தூக்குப்போட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தினமும் திருவான்மியூர் சென்று வந்து சூட்டிங்கில் பங்கேற்க முடியாது என்பதால் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
28 வயதான சித்ராவுக்கு, 4 மாதங்கள் முன்பு, ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவரும் இதே ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா.

Vi chithra suicide . Hanged herself in 5 star hotel

ஹேம்நாத்துடன் 2 மாதத்துக்கு முன் சித்ரா பதிவு திருமணம் செய்துக்கொண்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.


அப்போது தான் குளிக்கப்போவதாகவும், எனவே நீங்கள் வெளியே நில்லுங்கள் என்றும் ஹேமந்திடம், சித்ரா கூறியுள்ளார். இதையடுத்து ஹேம்நாத் ரூமை விட்டு வெளியே வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. கதவை தட்டிப் பார்த்தும், பதில் வரவில்லை.
அதிர்ச்சியடைந்த ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். அப்போதுதான் அங்கு சித்ரா புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல் துறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சென்று சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹோட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் சார்ந்த துறையில் இருந்து கொடுக்கப்பட்ட வேறு ஏதும் அழுத்தங்கள் இந்த தற்கொலைக்கு காரணமாக என்ற கோணத்திலும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

ஹேம்நாத்துடன் 2 மாதத்துக்கு முன் சித்ரா பதிவு திருமணம் செய்துக்கொண்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

அக்.19-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தற்கொலை செய்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.Categories: Cinema News

Tags: ,

%d bloggers like this: