வெப் தொடரில் ரம்யா பாண்டியன்

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் நடிகர் நடிகைகள் பலரும் அதற்கு மாறி வருகிறார்கள்.

ரம்யா பாண்டியன் தமிழ் மொழி படங்களில் நடிக்கும் இந்திய நடிகை.இவர் ஜோக்கர் (2016) படத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

ரம்யா பாண்டியன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வாளராக பணி செய்து வணிக வளர்ச்சி மேலாளராக பதவி உயர்வு பெற்றார். அவரது தாய்மொழி தமிழ்.இவரது சித்தப்பா நடிகர் அருண்பாண்டியன், தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவரது பூர்வீகம் திருநெல்வேலி.இயற்கை தோட்டப் பயிர்செய்வதில் ஆர்வம் கொண்டவர்.

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் நடிகர் நடிகைகள் பலரும் அதற்கு மாறி வருகிறார்கள். 20-க்கும் மேற்பட்ட வெப் தொடர்கள் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகை ரம்யா பாண்டியனும் வெப் தொடரில் நடிக்கிறார். இவர் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். டம்மி பட்டாசு, சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் தொடருக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளனர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி உள்ளது. நடன இயக்குனர் ராபர்ட், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் ராம் கதை எழுதி டைரக்டு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முகிலன் வெப் தொடர் வருகிற 30-ந்தேதி வெளியாகிறது.Categories: Cinema News

Tags: , , , ,

%d bloggers like this: