ரஜினி அரசியலுக்கு வரட்டும், அவருடன் நேருக்கு நேர் மோத தயார் – சவால் விட்டாரா தளபதி விஜய்?? பிரபல பத்திரிக்கையில் வெளியான தகவலால் பரபரப்பு.!!

ரஜினி அரசியலுக்கு வரட்டும் அவருடன் நேருக்கு நேர் மோத தயார் என தளபதி விஜய் சவால் விட்டதாக பிரபல பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசியலுக்கு வந்தால்தான் ஆன்மீக அரசியல் தான் மேற்கொள்வேன் 234 தொகுதியிலும் போட்டி விடுவேன் என அறிவித்துள்ளார்.

ஆனால் எப்போது அரசியலுக்கு வருவேன்? கட்சியின் பெயர் என்ன என்பது குறித்து அவர் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை நிச்சயம் மிஞ்சி விடுவேன். அவருடன் நேருக்கு நேர் போட்டியிட தயார் என தளபதி விஜய் கூறியது போல முன் பக்கத்திலேயே பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தளபதி விஜய் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, அப்படி இருக்கும் போது விஜய் இப்படி கூறியிருப்பாரா என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.Categories: Cinema News

%d bloggers like this: