‘டிக் டிக் டிக்’ பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ – பாரதிராஜாவுக்கு ‘இரண்டாம் குத்து’ இயக்குனர் பதிலடி

இரண்டாம் குத்து’ படத்தைக் கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டிருந்த பாரதிராஜாவுக்கு அப்படத்தின் இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஹரஹர மஹாதேவகி என்கிற அடல்ட் காமெடு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படமும் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படமாக இருந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால் தற்போது மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி உள்ளார் சந்தோஷ். ‘இரண்டாம் குத்து’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை நடிகர் ஆர்யா நேற்று வெளியிட்டார். அதில் ஆபாச வசனங்கள், காட்சிகள் அதிகமாக உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இயக்குனர் பாரதிராஜா ‘இரண்டாம் குத்து’ படத்தைக் கடுமையாக சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு அப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “அவர் மீது மரியாதை இருக்கிறது. 1981ல் வெளிவந்த ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ,” என பதிவிட்டுள்ளார்.Categories: Cinema News

Tags: , , , , , ,

%d bloggers like this: