ஹாத்ரஸ் சம்பவம்…. குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து தூக்கிலிட வேண்டும் – நடிகை மதுபாலா ஆவேசம்

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக நடிகை மதுபாலா ஆவேசமாக பேசி உள்ளார்

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரியிருக்கிறது.
இதற்கிடையே, ஹாத்ரஸ் சம்பவம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பல துறையை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் ஜென்டில்மேன் பட நடிகை மதுபாலா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் உணர்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் மக்கள் எதிர்மறை தாக்கத்தை கூட சாதமாக எதிர்கொண்டு வாழப்பழகியதை பற்றி சில நிமிடங்கள் பேசிய அவர், பின்னர் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளின் செயல்பாடு குறித்தும் பேசியுள்ளார், அவர்களை சட்டம் இயற்றும் இடத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறார்.Categories: Cinema News

Tags: , , , ,

%d bloggers like this: