திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் பங்கேற்கும்….மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை. Drishyam 2 -Meena and Mohanlal where suggested to take corona test in shooting spot before commencing the shoot.

கொரோனா பரவல் இன்னும் அடங்கவில்லை. அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் சிக்குகிறார்கள். தற்போது மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தி சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளன. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

சமூக விலகல், கை கழுவுதல் நடிகர், நடிகைகள் தவிர மற்றவர்கள் முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசு விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்துகிறார்கள். ஆனாலும் படப்பிடிப்புகளிலும் கொரோனா தொற்று பரவுகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த 2 இந்தி தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மோகன்லால், மீனா ஆகியோர் மலையாளத்தில் நடிக்கும் திரிஷ்யம் 2-ம் பாகம் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இன்று தொடங்குகிறது.

மோகன்லால், மீனா உள்பட படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.Categories: Cinema News

Tags: , , , , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: